உத்தமபாளையத்தில் தனக்குத்தானே மார்பில் குத்தி தொழிலாளி உயிரிழப்பு

மல்லிகிருஷ்ணனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது. மல்லிகிருஷ்ணன் தன்னுடன் சேர்ந்து வாழுமாறு ஈஸ்வரியை அழைத்துள்ளார்.
உத்தமபாளையத்தில் தனக்குத்தானே மார்பில் குத்தி தொழிலாளி உயிரிழப்பு
Published on

உத்தமபாளையம்:

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கோம்பைத்தொழுவை சேர்ந்தவர் மல்லிகிருஷ்ணன் (வயது32). இவருக்கும் உத்தமபாளையத்தை சேர்ந்த ஈஸ்வரிக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

சின்னமனூர் காந்திநகர் காலனி பகுதியில் வசித்து வந்தனர். இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகன் உள்ளான். மல்லிகிருஷ்ணனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது. இதனால் ஈஸ்வரி கோபித்துக்கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

இந்த நிலையில் அங்கு சென்று மல்லிகிருஷ்ணன் தன்னுடன் சேர்ந்து வாழுமாறு ஈஸ்வரியை அழைத்துள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரம் அடைந்து தனக்குத்தானே மார்பில் குத்திக்கொண்டு மயக்கம் அடைந்தார். அவரது உறவினர்கள் எழுப்பியும் எழுந்திருக்கவில்லை. இதனால் அச்சமடைந்த அவர்கள் மல்லி கிருஷ்ணனை உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து உத்தமபாளையம் போலீசில் அளித்த புகாரின் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com