வாக்களித்தே தீருவேன் - தேர்தல் அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் வாக்காளர்

மதுரவாயல் சட்டசபை தொகுதிக்குட்பட்ட காரம்பாக்கம் பகுதியில் பெண் வாக்காளர் உமாமகேஸ்வரி வாக்களிக்க சென்றார்.
வாக்களித்தே தீருவேன் -  தேர்தல் அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் வாக்காளர்
Published on

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் கட்சி என நான்கு முனை போட்டி நிலவுகிறது.

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு தொடங்கியது முதல் வரிசையில் நின்று மக்கள் ஆர்வமாக தங்கள் ஜனநாயக கடமையாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை மதுரவாயல் சட்டசபை தொகுதிக்குட்பட்ட காரம்பாக்கம் பகுதியில் பெண் வாக்காளர் உமாமகேஸ்வரி வாக்களிக்க சென்றார்.

அப்போது, உமாமகேஸ்வரி என்ற பெயரில் ஏற்கனவே வாக்கு செலுத்தப்பட்டதாக கூறிய தேர்தல் அதிகாரிகள், அவரை அனுமதிக்க மறுத்தனர். இதைக்கேட்ட உமாமகேஸ்வரி அதிர்ச்சி அடைந்தார்.

வாக்களித்தே தீருவேன் என பெண் வாக்காளர் தேர்தல் அலுவலரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com