கர்நாடக எல்லையில் நடைபயிற்சிக்கு சென்ற பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொலை

புதர் பகுதியில் சடலமாக முனிரத்தினம்மாவின் உடல் சடலமாக கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.உயிரிழந்த பெண் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
கர்நாடக எல்லையில் நடைபயிற்சிக்கு சென்ற பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொலை
Published on

ஓசூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே கர்நாடகா மாநிலம் பன்னர்கட்டா அருகேயுள்ள பேட்ராயன தொட்டி கிராமத்தை சேர்ந்தவர் முனிரத்னம்மா (வயது38). இவர் தனது தங்கை மகனை அழைத்து கொண்டு நேற்று முன்தினம் மாலை நடைபயிற்சிக்காக சென்றார்.

இரவு நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால், அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் பல இடங்களில் தேடிப் பார்த்தனர்.

இந்நிலையில், சுமார் இரவு 8 மணியளவில் பூதன ஹள்ளி பகுதியில் உள்ள ஒரு புதரின் அருகில் தலை, கை, கால்களில் பலத்த காயங்களுடன் சிறுவனின் அழுகை குரல் கேட்டதை அடுத்து அவனை மீட்ட குடும்பத்தினர் தொடர்ந்து முனிரத்தினம்மாவை தேடினர்.

நீண்ட நேரமாக தேடியும் அவர் கிடைக்காததாலும், இருள் சூழ்ந்து விட்டதாலும் அவரை தொடர்ந்து தேட முடியாமல் வீட்டுக்கு திரும்பி விட்டனர்.

பின்னர், மீண்டும் நேற்று தேடுதல் பணியில் ஈடுபட்டபோது, புதர் பகுதியில் சடலமாக முனிரத்தினம்மாவின் உடல் சடலமாக கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் உடனே இதுகுறித்து பன்னார்கட்டா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் அங்கு சென்று சடலத்தை மீட்டு சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து போலீசாரும், தடயவியல் நிபுணர்களும் மேற்கொண்ட விசாரணையில், உயிரிழந்த பெண் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து இதற்கு காரணமானவர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com