பிராட்வேயில் ஒரு நம்பர் லாட்டரி விற்பனை செய்த பெண் உள்பட 3 பேர் கைது

பிரகாசம் சாலையில் ஒரு நம்பர் லாட்டரி விற்பனை செய்வதாக எஸ்பிளனேடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.பெண் உள்பட 3 பேர் சேர்ந்து ஒரு நம்பர் லாட்டரியை ரகசியமாக மறைத்து வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது.
பிராட்வேயில் ஒரு நம்பர் லாட்டரி விற்பனை செய்த பெண் உள்பட 3 பேர் கைது
Published on

ராயபுரம்:

சென்னை பிராட்வே செம்புதாஸ் தெரு மற்றும் பிரகாசம் சாலையில் ஒரு நம்பர் லாட்டரி விற்பனை செய்வதாக எஸ்பிளனேடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார் நேற்று அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது பெண் உள்பட 3 பேர் சேர்ந்து ஒரு நம்பர் லாட்டரியை ரகசியமாக மறைத்து வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது. இது தொடர்பாக எஸ்பிளனேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்து வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்த பரமசிவன் (வயது 58) திருவொற்றியூர் பாரதி நகரைச் சேர்ந்த ஹேமலதா (38) மணலி சின்ன சேக்காடு பகுதியைச் சேர்ந்த கருணாகரன் (39) ஆகிய 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் அவர்களிடமிருந்து 1 லேப்டாப் ரூ. 7,500 பணம், 5 செல்போன்கள் மற்றும் துண்டு சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com