தொப்பூர் அருகே சோகம்- கணவர் கல்லறையில் உயிரை மாய்த்த மனைவி

செல்வம் இறந்துவிட்ட நிலையில் சின்னவள் மனமுடைந்து காணப்பட்டார்.சின்னவள் நேற்று பூச்சி மருந்து குடித்து விட்டு தனது கணவரின் கல்லறையில் படுத்து மயங்கி விழுந்து கிடந்தார்.
தொப்பூர் அருகே சோகம்- கணவர் கல்லறையில் உயிரை மாய்த்த மனைவி
Published on

தருமபுரி:

தருமபுரி மாவட்டம், தொப்பூர் அடுத்துள்ள பச்சியப்பன் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி சின்னவள் (வயது50).

இந்த நிலையில் செல்வம் இறந்துவிட்ட நிலையில் சின்னவள் மனமுடைந்து காணப்பட்டார். இதனால் உறவினர்கள் ஆறுதல் கூறியுள்ளனர். சின்னவள் ஏரி வேலைக்கு சென்று பிழைப்பு நடத்தி வந்தார்.

ஆனாலும் தனது கணவர் இறந்த துக்கம் தாங்காமல் இருந்து வந்தார். இதில் மனமுடைந்து காணப்பட்ட சின்னவள் நேற்று பூச்சி மருந்து குடித்து விட்டு தனது கணவரின் கல்லறையில் படுத்து மயங்கி விழுந்து கிடந்தார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் அவர் உயிரிழந்தார்.

இதுகுறித்து தொப்பூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com