

தமிழக வெற்றிக் கழகத்திற்கு விடுதலை சிறுத்தைகள் இன்று ஆதரவு அளித்தது. இதனைத் தொடர்ந்து திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
த.வெ.க. தலைவர் விஜய் ஆட்சி அமைப்பதற்கு தடையாக இருந்து விடக் கூடாது என்பதற்காகவும், குடியரசு ஆட்சி நடைமுறைக்கு வந்து விடக்கூடாது என்பதற்காகவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு காரணத்திற்காக வெளியில் இருந்து ஆதரவு வழங்குவதாகவும், ஆட்சி அமைப்பதற்கு உறுதுணையாக இருப்பது என்கிற அளவில் இந்த முடிவை எடுத்துள்ளோம்.
ஆளுநர் விஜயை சந்திக்க மறுப்பு தெரிவித்தது அதிர்ச்சி அளிக்கிறது. மக்கள் த.வெ.க.-வுக்கு அதிக இடங்களை கொடுத்திருக்கிறார்கள். இதனால் அவரை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று ஏற்கனவே கூறியிருந்தோம்.
இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.