

சென்னை தலைமைச் செயலகம் எதிரே திடீர் வாயுக்கசிவு ஏற்பட்டது. துறைமுகம் அருகே உள்ள நிலையில் திடீர் வாயுக்கசிவு ஏற்பட்டதால் அப்பகுதியில் முழுவதும் கடும் புகை மூட்டமாக காணப்பட்டது.
இதன் காரணமாக பொதுமக்கள் மூச்சுத்திணறலால் அவதியடைந்தனர். ஒரு சிலருக்கு இருமலும் வாந்தியும் ஏற்பட்டது.
சென்னை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலில் இருந்து சல்பேட் வாயுக்கசிவு என தகவல் வெளியானது.
இந்நிலையில் வாயுக்கசிவு ஏற்பட்டது தொடர்பாக சென்னை துறைமுகம் விளக்கம் அளித்துள்ளது. அதில்,
துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலில் இருந்து வெப்பம் காரணமாக வேதியியல் மாற்றம் அடைந்து சல்பேட் வாயு கசிந்துள்ளது. சல்பேட் வேதியியல் மாற்றம் அடைந்து வெண்புகையாக படர்ந்து வருகிறது. காற்றில் நைட்ரஜன் டை ஆக்சைடு, அமோனியா வாயு கலந்துள்ளது.
ரசாயன பொடிகளை தூவி வாயுவை கட்டுப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.