

தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் முதல்முறையாக போட்டியிட்டு வென்ற தமிழக வெற்றி கழகம் ஆட்சியை வென்றது.
இதனால், அக்கட்சியின் தலைவர் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றார்.
பதவியேற்ற நாளில் தமிழகத்தின் நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை விரைவல் வெளியிடப்படும் என முதலமைச்சர் விஜய் கூறியிருந்தார்.
இந்நிலையில், நிதி அமைச்சர் மரிய வில்சனிடம் வெள்ளை அறிக்கை தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த அவர் கூறியதாவுது:-
தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை தயாராகி வருகிறது.
நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை 2 வாரங்களில் வெளியிடப்படும் என்றும் நிதி அமைச்சர் மரிய வில்சன் உறுதியாக தெரிவித்துள்ளார்.
விரைவில் தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளர்.