ஈரோடு வனக்கோட்டத்தில் ஈரநில பறவைகள் கணக்கெடுப்பு

21 பகுதிகளில் ஈரநில பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்றது.வனத்துறை பணியாளர்களுடன், தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சேர்ந்த பறவைகள் ஆர்வலர்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
ஈரோடு வனக்கோட்டத்தில் ஈரநில பறவைகள் கணக்கெடுப்பு
Published on

ஈரோடு:

நீர் நிலைகளில் வாழும் பறவைகளின் எண்ணிக்கை மற்றும் பரவல் குறித்த தரவுகளை சேகரித்து அவற்றை பாதுகாக்கும் முயற்சிகளை முன்னெ டுக்கும் விதமாக ஈர நில பறவைகள் கணக்கெடுக்கும் பணி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி இந்த ஆண்டுக்கான ஈரநில பறவைகள் கணக்கெடுக்கும் பணி இன்று நடைபெற்றது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஈரோடு வனக்கோட்ட பகுதிகளில் இன்று காலை 6.30 மணி முதல் முற்பகல் 11 மணி வரை நீர் நிலைகளில் உள்ள பறவைகள் குறித்த கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.

இதில், ஈரோடு வனக்கோட்டத்திற்கு உட்பட்ட வெள்ளோடு பறவைகள் சரணாலயம், கொடுமுடி, அவல்பூந்துறை, கனகபுரம், வரட்டுப்பள்ளம், அந்தியூர் பெரிய ஏரி, தண்ணீர் பள்ளம் ஏரி, ஓடாந்துறை ஏரி, ஜர்தல் ஏரி, தாமரை க்கரை குளம், மணியாச்சி பள்ளம் உள்ளிட்ட 21 பகுதிகளில் ஈரநில பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்றது.

இதில், வனத்துறை பணியாளர்களுடன், தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சேர்ந்த பறவைகள் ஆர்வலர்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com