

கோவை சிறுமி கொலை தொடர்பாக மேற்கு மண்டல ஐஜி ரம்யா பாரதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
மாலை 6 மணிக்கு குழந்தையை காணவில்லை என 100 என்ற எண்ணிற்கு தகவல் வந்தது. இரவு 10 மணிக்கு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினோம். வழக்குப்பதிவு செய்யப்பட்டு 5 தனிப்படைகள் விசாரணையில் ஈடுபட்டன.
சிசிடிவியை ஆய்வு செய்தபோது, பக்கத்து வீட்டில் இருந்த கார்த்தி சிறுமியை அழைத்துச் சென்றது தெரியவந்தது.
சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொன்றுள்ளான்.
பதுங்கி இருந்த குற்றவாளியை போலீசார் மடக்கிப் பிடித்தபோது தப்பியோடியதில் வலது கை, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
குற்றம் நடந்த 24 மணி நேரத்துக்குள் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கார்த்தி, மோகன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
குற்றவாளியை விரைந்து கைது செய்ததுபோல், குற்றப் பத்திரிகை விரைவாக தயாரிக்கப்பட்டு தண்டனை பெற்றுத் தரப்படும்.
பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபிறகு மேலும் முழுமையான விவரங்கள் தெரிவிக்கப்படும் என தெரிவித்தார்.