மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக குறைப்பு

இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 117.73 அடியாக இருந்தது. மழை நின்றதால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவும் குறைந்து வருகிறது.
மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக குறைப்பு
Published on

மேட்டூர்:

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வந்தது.

இந்த நிலையில் மழை நின்றதால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவும் குறைந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 117.73 அடியாக இருந்தது. அணைக்கு நேற்று வினாடிக்கு 23 ஆயிரத்து 648 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று காலை முதல் வினாடிக்கு 17 ஆயிரத்து 584 கனஅடியாக குறைந்து வந்து கொண்டு இருந்தது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 12ஆயிரம் கனஅடியாக திறந்து விடப்பட்ட தண்ணீர் தற்போது வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது. மேலும் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு தொடர்ந்து வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 89.89 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com