காவிரி கரையோர பகுதிகளில் கோடை மழை: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

சினிபால்ஸ், மெயின் அருவி, ஐந்தருவி உள்பட பல்வேறு அருவி களிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி செல்கிறது.
காவிரி கரையோர பகுதிகளில் கோடை மழை: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
Published on

கர்நாடகா அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு தொடர்ந்து குறைக்கப்பட்டு உள்ள நிலையில் தமிழகத்திற்கு ஒகேனக்கல் வழியாக வரக்கூடிய நீர்வரத்தும் குறைந்து கொண்டே வந்தது. இதனால் ஒகேனக்கல் ஆற்றில் நேற்று வரை வினாடிக்கு 200 கன அடியாக நீர்வரத்து நீடித்து இருந்தன.

இந்த நிலையில் நேற்று மாலை நேரத்தில் தமிழக காவிரி கரையோரப் பகுதிகளில் ஆங்காங்கே கோடை மழை பெய்ததன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 200 கன அடியாக இருந்த நீர்வரத்து, படிப்படியாக உயர்ந்து தற்போது வினாடிக்கு 2000 கன அடியாக வருகிறது.

இதனால் சினிபால்ஸ், மெயின் அருவி, ஐந்தருவி உள்பட பல்வேறு அருவி களிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி செல்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com