ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 4000 கனஅடியாக அதிகரிப்பு

தமிழக காவிரி கரையோர பகுதிகளில் ஆங்காங்கே பெய்த மழை பெய்தது.
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 4000 கனஅடியாக அதிகரிப்பு
Published on

தமிழக- கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்ந்து வருகிறது. இதனால் கர்நாடகா மாநிலத்தில் உள்ள அணைகளில் இருந்து உபரி நீர் திறப்பு அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்து வந்தது.

இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று முன்தினம் வினாடிக்கு 1000 கன அடியாக நீர்வரத்து குறைந்தது. நேற்று ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 2000 கன அடி யாக அதிகரித்தது.

இந்த நிலையில் தற்போது தமிழக காவிரி கரையோர பகுதிகளில் ஆங்காங்கே பெய்த மழை பெய்தது. இதன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து தற்போது அதிகரித்து வினாடிக்கு 4000 கன அடியாக நீடித்து வருகிறது.

இதனால், மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

இந்த நீர்வரத்தை காவிரி நுழைவிடமான தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலு வில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com