ரூ.4000 கொடுத்தால் விஐபி தரிசனம்..!- அமைச்சரிடமே வசூல் செய்த திருச்செந்தூர் கோவில் அர்ச்சகர்கள்

ஆய்விற்காக சென்றபோது அமைச்சர் என தெரியாமல் பணம் கேட்டதாக தகவல்.
ரூ.4000 கொடுத்தால் விஐபி தரிசனம்..!- அமைச்சரிடமே வசூல் செய்த திருச்செந்தூர் கோவில் அர்ச்சகர்கள்
Published on

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோவிலில் விஐபி தரிசனத்திற்கு அமைச்சரிடமே அர்ச்சகர்கள் பணம் கேட்டதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் மாஸ்க் அணிந்து ஆய்விற்காக சென்றபோது அமைச்சர் என தெரியாமல் பணம் கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சாதாரணமாக டிசர்ட் அணிந்து கோவிலுக்கு சென்றதால், அமைச்சரிடம் ரூ.4,000 தந்தால் விஐபி தரிசனத்தில் அழைத்து செல்வதாக அர்ச்சகர்கள் கூறியுள்ளனர்.

ரூ.4000 ஜிபே மூலம் செலுத்திவிட்டு கோவிலுக்குள் சென்ற அறிநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அர்ச்சகர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

பல்வேறு முறைகேடுகள் தொடர்பாக அறநிலையத்துறை அமைச்சர் ஆய்வுக்காக சென்றபோது பணம் கேட்டு அர்ச்சகர்கள் அடாவடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

திருச்செந்தூர் முருகன் கோவிலில் ரூ.100 கட்டண தரிசனம் மட்டுமே நிலுவையில் உள்ள நிலையில் முறைகேடாக கட்டணம் வசூலித்துள்ளனர்.

பக்தர்கள் கூட்டம் காரணமாக ரூ.100 கட்டணம் தரிசனமும் ரத்து செய்யப்பட்ட நிலையில் அமைச்சரிடமே வசூலில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com