

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூரை கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.
இந்த சந்திப்பின்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் எம். எஸ். காமராஜ், காங்கிரஸ் வர்த்தக பிரிவு மாநில செயல் தலைவர் எம். ஜி. ராமசாமி, வர்த்தக பிரிவு மாநிலத் துணைத் தலைவர்கள் கொண்டல்தாசன், மாம்பலம் ராஜேந்திரன், தாயுமானவன், தணிகாசலம், வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர்கள் தணிகைவேல், ஹேம்நாத், செந்தில் குரு, ஓ. எம். ஆர். சிவா, பார்த்திபன் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.