விஜய்யின் அரசியல் - ஒரே வார்த்தையில் பதிலளித்த நடிகர் மம்மூட்டி

நடிகர் விஜய்யின் அரசியல் பயணம் குறித்த கேள்விக்கு நடிகர் மம்மூட்டி பதிலளித்துள்ளார்.
விஜய்யின் அரசியல் - ஒரே வார்த்தையில் பதிலளித்த நடிகர் மம்மூட்டி
Published on

தமிழ்நாட்டில் கடந்த வியாழன்கிழமை (ஏப்.26) சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. அரசியல் தலைவர்களைவிட, மக்கள் தேர்தல் முடிவுகளுக்காக தீவிரமாக காத்துள்ளனர். காரணம், நடிகர் விஜய்யின் அரசியல் வருகை மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதா என்பதை அறிய பலரும் ஆவலாக உள்ளனர்.

இதனிடையே அவரது அரசியல் குறித்து நடிகர்கள் பலரும் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றனர். சில நடிகர்கள் இதனை வரவேற்றுள்ள நிலையில், சிலர் விமர்சனங்களையும் முன்வைத்துள்ளனர். இந்நிலையில் நடிகர் மம்மூட்டியிடம் இன்று விஜய்யின் அரசியலை எப்படி பார்க்கிறீர்கள்? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அவர் ‘ஒன்றும் தெரியாது... விட்ருங்க’ என்றுக்கூறி நாசுக்காகத் தவிர்த்துவிட்டார். இருப்பினும், இருவருக்கும் இடையே நீண்டகாலமாகப் பரஸ்பர மரியாதை இருந்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com