தமிழக மக்களின் இதயங்களில் அழியாத தடம் பதித்தவர் ஜெயலலிதா - துணை ஜனாதிபதி

தமிழக வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் அவர் ஆற்றிய பங்களிப்பையும், இந்நாளில் நினைவு கூர்கிறேன்.தமிழக வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் அவர் ஆற்றிய பங்களிப்பையும், இந்நாளில் நினைவு கூர்கிறேன்.
தமிழக மக்களின் இதயங்களில் அழியாத தடம் பதித்தவர் ஜெயலலிதா -  துணை ஜனாதிபதி
Published on

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான மறைந்த ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு எனது அஞ்சலி.

பெண்கள் முன்னேற்றம், ஏழை எளிய மக்களின் நலன், சமூக நீதியை நிலை நாட்டிட பல முக்கிய நலத்திட்டங்களை முன்னெடுத்து, தமிழக மக்களின் இதயங்களில் அழியாத தடம் பதித்தவர்.

துணிவு, தெளிவு, தீர்மானமான முடிவு மற்றும் பொதுச்சேவைக்கான அர்ப்பணிப்பு என தனித்துவமிக்க தலைவராக திகழ்ந்த, அவரது சீரிய பணிகளையும் தமிழக வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் அவர் ஆற்றிய பங்களிப்பையும், இந்நாளில் நினைவு கூர்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com