

தீயணைப்புத்துறை டிஜிபியாக மூத்த ஐஏஎஸ் அதிகாரி வெங்கடராமனை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. சிவில் சப்ளை சிஐடி டிஜிபியாக இருந்த வெங்கடராமன், தீயணைப்புத்துறை டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக, தமிழ்நாடு டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் ஓய்வு பெற்றபோது, சட்டம், ஒழுங்கு பிரிவின் பொறுப்பு டிஜிபியாக நியமிக்கப்பட்டார்.
சட்டம், ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கப்படுவதற்கு முன்பு, தமிழ்நாடு காவல் துறையின் நிர்வாகப் பிரிவு கூடுதல் டிஜிபியாகப் பணியாற்றினார்.
நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடராமன், 1968-ல் பிறந்தவர். 1994ம் வருட பேட்சைச் சேர்ந்தவர்.