முதல்வர் விஜய் அமைச்சரவையில் புதிய AI துறை அமைச்சரானார் ஆர்.குமார்

ஆளுநர் மாளிகையில் தமிழக அமைச்சரவை விரிவாக்கம் இன்று நடைபெற்றது.
முதல்வர் விஜய் அமைச்சரவையில் புதிய AI துறை அமைச்சரானார் ஆர்.குமார்
Published on

தமிழக முதலமைச்சராக கடந்த 10-ம் தேதி ஜோசப் விஜய் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருடன் 9 பேர் அமைச்சராக பொறுப்பு ஏற்றுக்கொண்டனர்.

இதற்கிடையே, தமிழக அமைச்சரவை விரிவாக்கம் இன்று நடைபெற்றது. இதில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் உள்பட மொத்தம் 23 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.

இதில், உலகின் சிறந்த தொழில்நுட்பமாகக் கருதப்படும் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) துறைக்கு என தனி அமைச்சர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை வேளச்சேரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆர்.குமார் செயற்கை நுண்ணறிவு துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர், செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் என அழைக்கப்படுவார்.

சமீபத்தில் கேரளாவில் மட்டும் செயற்கை நுண்ணறிவு துறைக்கு தனியாக அமைச்சர் நியமனம் செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது தமிழ்நாட்டிலும் ஏ.ஐ. துறைக்கு தனியாக அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவிலேயே கேரளா மற்றும் தமிழகத்தில்தான் செயற்கை நுண்ணறிவு துறைக்கு என தனியாக அமைச்சர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com