3வது இடத்துக்கு தள்ளப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து: வன்னி அரசு கண்டனம்

தவெக தலைவர் விஜய் இன்று முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
3வது இடத்துக்கு தள்ளப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து: வன்னி அரசு கண்டனம்
Published on

தவெக தலைவர் விஜய் இன்று முதலமைச்சராக பதவியேற்றார். இந்தப் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக இசைக்கப்பட்டது.

இதற்கு பல தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்துவருகிறது. திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தாய் தமிழுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு காரணமானவர்கள் யார் என்பதை கண்டறிய வேண்டும்; தமிழ்நாடு அரசின் ஒப்புதலோடுதான் ஆளுநர் கொடுங்குற்றத்தை அரங்கேற்றினாரா என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு வலியுறுத்தியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com