தூத்துக்குடி வி.ஏ.ஓ. கொலை வழக்கு: சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேர் பணியிட மாற்றம்

முறப்பநாட்டில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் லூர்து பிரான்சிஸ் சேவியர்.வி.ஏ.ஓ. கொலை தொடர்பாக தனிப்படைகள் அமைக்கப்பட்டு 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி வி.ஏ.ஓ. கொலை வழக்கு: சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேர் பணியிட மாற்றம்
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாட்டில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் லூர்து பிரான்சிஸ் சேவியர் (வயது 54). கடந்த ஏப்ரல் 25-ந் தேதி இவரை மணல் கடத்தல் கும்பல் அவர் பணியாற்றி வந்த வி.ஏ.ஓ. அலுவலகத்தில் வைத்து வெட்டிக்கொலை செய்தது.

பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த கொலை தொடர்பாக தனிப்படைகள் அமைக்கப்பட்டு கலியாவூரை சேர்ந்த ராமசுப்பு, மாரிமுத்து ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பரிந்துரையின்பேரில், கைது செய்யப்பட்ட 2 பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. இதற்கிடையே இந்த வழக்கில் முறப்பநாடு போலீஸ் நிலைய ஏட்டு சரவணன், எஸ்.பி. தனிப்பிரிவு காவலர் மகாலிங்கம், முறப்பநாட்டில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி தற்போது சாயர்புரம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் சுரேஷ் ஆகியோர் உரிய முறையில் நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் எழுந்தது.

இது தொடர்பாக ரூரல் டி.எஸ்.பி. சுரேஷ் விசாரணை நடத்தி நடத்தி வந்தார்.

இந்நிலையில் ஏட்டு சரவணன், தனிப்பிரிவு காவலர் மகாலிங்கம், சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் ஆகிய 3 பேரும் நீலகிரி மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com