டாக்டர் சிவந்தி ஆதித்தனார் படத்திற்கு வைகோ மாலை அணிவித்து மரியாதை

பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் விழா தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நடைபெற்றது.தினத்தந்தி பத்திரிகையில் செய்திகளை உடனுக்குடன் கொடுத்தவர்.
டாக்டர் சிவந்தி ஆதித்தனார் படத்திற்கு வைகோ மாலை அணிவித்து மரியாதை
Published on

சங்கரன்கோவில்:

ம.தி.மு.க. சார்பில் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் விழா தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நடைபெற்றது.

இதனை முன்னிட்டு சங்கரன்கோவில் பழைய பஸ் நிலையம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் படத்திற்கு, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

பத்திரிகை உலகில் புரட்சி செய்த தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் மகன் டாக்டர் பத்மஸ்ரீ சிவந்தி ஆதித்தனார் தினத்தந்தி பத்திரிகையை பங்களாவாசி முதல் ஏழை, எளிய மக்கள் வரை வாசிக்கும் பழக்கத்தை உருவாக்கியவர்.

தினத்தந்தி பத்திரிகையில் தமிழக செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், பொருளாதார செய்திகள் உள்ளிட்டவைகளை உடனுக்குடன் கொடுத்தவர்.

தந்தி டி.வி.யை உருவாக்கிய சிவந்தி ஆதித்தனாரின் பிறந்தநாளை சங்கரன்கோவிலில் கொண்டாடுவது பெரும் மகிழ்ச்சி தருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது வாசுதேவ நல்லூர் எம்.எல்.ஏ. டாக்டர் சதன் திருமலை குமார், ம.தி.மு.க. துணை பொது செயலாளர் தி.மு. ராஜேந்திரன், மாநில மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் சுப்பாராஜ், தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் சுதா பாலசுப்பிரமணியன், நகர செயலாளர் ரத்ன வேல்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com