

காஞ்சிபுரம் வரதராஜா பெருமாள் திருக்கோவிலில் திருஅவதார உற்சவம் எனும் பெருமாளின் பிறந்தநாள் விழா உற்சவம் இன்று நடைபெற்று வருகிறது. இந்த பிறந்தநாள் உற்சவத்தை முன்னிட்டு பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து சிறப்பு அலங்காரத்தில் மூலவர் தேவராஜ சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.
இந்நிலையில் பெருமாளின் கருவறை மண்டபத்தில் அமர்ந்து தாதாச்சாரியாரி பிரிவினர் ஸ்தோத்திர பாடல் பாடுவதை வழக்கமாகவும் உரிமையாகவும் கொண்டு உள்ளனர். இந்த நிலையில் தாதாச்சாரியார் பிரிவினர் ஸ்தோத்திர பாடல் பாடுவதில் தங்களுக்கும் உரிமை வழங்க வேண்டும் என கேட்டு தென்கலை ஐயங்கார்கள் பிரிவினர் திடீர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக ஏராளமான போலீசார் கோவில் கருவறை முன்பே குவிக்கப்பட்டனர். இந்த நிலையில் தாதாச்சாரி பிரிவினரும், தென்கலை ஐயங்கார் பிரிவினரும் ஆக்ரோஷமான வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பெருமாளின் பிறந்தநாளில் பெருமாளை முதன்மையாக வணங்கும் இரு பிரிவினரும் பெருமாளும் புகழைப் பாடும் சோஸ்திர பாடல் பாடுவதில் தகராறில் ஈடுபட்டது பெருமாளை காண வந்த பக்தர்களை முகம் சுளிக்க வைத்தது.