ஊசலாட்டமின்றி மாநில உரிமையை நிலைநாட்டுக: த.வெ.க. அரசுக்கு CPI-M வலியுறுத்தல்

மாநில உரிமையை நிலைநாட்டும் வகையில் உச்சநீதிமன்றம் வரை சென்று பெறப்பட்டுள்ள தீர்ப்பை செயல்படுத்த தமிழகத்தில் அமைந்துள்ள த.வெ.க. அரசு முன்வர வேண்டும்.
ஊசலாட்டமின்றி மாநில உரிமையை நிலைநாட்டுக: த.வெ.க. அரசுக்கு CPI-M வலியுறுத்தல்
தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைவர் சண்முகம்
Published on

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஒரு அரசியல் சாசனம் எவ்வளவு நன்மை வாய்ந்ததாக இருந்தாலும் அதை செயல்படுத்துபவர்கள் நல்லவர்களாக இல்லாவிட்டால் அது மோசமானதாகவே இருக்கும் என்பது சட்ட மேதை அம்பேத்கரின் மணி வாசகங்களில் ஒன்று.

மாநில உரிமையை நிலைநாட்டும் வகையில் உச்சநீதிமன்றம் வரை சென்று பெறப்பட்டுள்ள தீர்ப்பை செயல்படுத்த தமிழகத்தில் அமைந்துள்ள த.வெ.க. அரசு முன்வர வேண்டும்.

மாநிலங்களில் அரசு மாறலாம், ஆனால் மாநில உரிமைகள் என்பதும், கூட்டாட்சி என்பதும் அரசியல் சட்டத்தின் அடிப்படை மாண்புகளாகும். இதில் சமரசத்திற்கு இடமில்லை.

மாநில உரிமைகளை நிலைநாட்டுவதில் த.வெ.க. அரசுக்கு ஊசலாட்டம் கூடாது.

இவ்வாறு அறிக்கையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com