போதைப்பொருள் விற்பனை - அரசியல் தலைவரின் உறவினர் உள்பட 2 பேர் கைது

திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த ஒருவரிடம் இருந்த மெத்தம் பெட்டமைன் போதைப்பொருள் வாங்கியதாக தெரிவித்தார்.ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள மெத்தம் பெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
ராகுல் - காதர் மொய்தீன் 
ராகுல் - காதர் மொய்தீன் 
Published on

ராயபுரம்:

சென்னை பகுதிகளில் மெத்தம் பெட்டமைன் போதைப்பொருள் விற்பனை செய்வதாக கூடுதல் போலீஸ் கமிஷனர் அஸ்ரா கார்க்கிற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவுப்படி தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இதில் சென்னை கிழக்குகடற்கரை பகுதியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டபோது பழைய வண்ணாரப்பேட்டை கல்லறை சாலையை சேர்ந்த காதர் மொய்தீன் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த ஒருவரிடம் இருந்த மெத்தம் பெட்டமைன் போதைப்பொருள் வாங்கியதாக தெரிவித்தார்.

மேலும் சென்னையில் பல்வேறு பகுதிகளில் மெத்தம் பெட்டமைனை பதுக்கி வைத்து வாட்ஸ் அப் குழு மூலம் ராகுல் என்பவர் விற்றது தெரிந்தது. இதைத்தொடர்ந்து ராகுலையும் போலீசார் கைது செய்தனர். அவர் அரசியல் பிரமுகர் ஒருவரின் நெருங்கிய உறவினர் என்று கூறப்படுகிறது.

அவர்களிடம் இருந்து ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள மெத்தம் பெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. போதைப்பொருள் கடத்தி விற்பனையில் தொடர்புடையவர்கள் குறித்து கைதான ராகுலிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com