

தருமபுரி மாவட்டம், அரூர் அருகே பொய்யபட்டி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன், கலையரசி இந்த தம்பதியர்களுக்கு கடந்த 2011-ல் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தது. அவர்களுக்கு செந்தமிழ்காவியா, பைந்தமிழ் ஓவியா என பெயர் வைத்தனர்.
இப்போது நடந்த பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் இரட்டையாக பிறந்ததை போல் இருவரும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 420 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
பாட வாரியாக செந்தமிழ்காவியா பெற்ற மதிப்பெண் தமிழ் 94, ஆங்கிலம் 77, கணிதம் 75, அறிவியல் 82, சமூக அறிவியல் 92 என மொத்தம் 420 மதிப்பெண் பெற்றார்.
அதேபோல், பைந்தமிழ் ஓவியா பெற்ற மதிப்பெண்கள் தமிழ் 83, ஆங்கிலம் 73, கணிதம் 88, அறிவியல் 85, சமூக அறிவியல் 91 என மொத்த மதிப்பெண் 420 பெற்றுள்ளார்.
மொத்த மதிப்பெண் ஒன்றாக இருந்தாலும் பாட வாரியாக இவர்கள் பெற்ற மதிப்பெண்களில் மாற்றம் உள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் இருவரும் ஒரே மதிப்பெண் எடுத்து சாதனைப்படுத்துள்ளனர் இவர்களை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.