

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் இன்று சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தனது இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டார். அப்போது மத்திய மந்திரி ஒருவர் நடிகர் என்று விமர்சனம் செய்ததற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசினார்.
இது தொடர்பாக விஜய் பேசுகையில் "பாஜக மந்திரி ஒருவர் சொல்கிறார், நான் நடிகர் என்று, ஆமாம், நான் நடிகர்தான். யார் இல்லைன்னா, அவர் என்னமோ புதுசா கண்டுபிடித்த மாதிரி. ஆனா, நான் அரசியலுக்கு வந்துட்டு நடிக்கல., நடிப்பதற்கான அரசியலுக்கு வரவில்லை. அரசியல்ல நான் நடிக்கல.
ஆனா நீங்க என்ன செய்றீங்க, அரசியலில் இருந்துட்டு நாடகம் மேல நாடகம் போடுகிறீர்களே, உங்களை நாடக நடிகர்கள் என்று சொல்லலாமா?. மத்திய அரசின் அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டு திமுக உடன் ஒரு நாடகம், மற்றவர்களுடன் ஒரு நாடகம். உங்களை எல்லாம் டேஞ்சரான நாடக கம்பெனி என்று சொல்லலாமா?" என்றார்.