TN Election 2026 | திருத்தப்பட்ட பிரமாண பத்திரம் தாக்கல் செய்த த.வெ.க. தலைவர் விஜய்

பெரம்பூர் தொகுதிக்கான பிரமாண பத்திரத்திலும், திருச்சி கிழக்கு தொகுதிக்கான பிரமாண பத்திரத்திலும் வேறுபாடு இருந்ததாக செய்திகள் வெளியானது.
TN Election 2026 | திருத்தப்பட்ட பிரமாண பத்திரம் தாக்கல் செய்த த.வெ.க. தலைவர் விஜய்
Published on

தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். பெரம்பூரில் கடந்த 30-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்தார். அதன்பின் திருச்சி கிழக்கு தொகுதிக்கான வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

திருச்சி கிழக்கு தொகுதிக்காக தாக்கல் செய்த வேட்புமனுவின் பிரமாண பத்திரத்தில் கிரிமினல் வழக்கு இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். அதேபோல் தேர்தல் வரவு செலவு பராமரிப்பிற்காக இரண்டு வங்கிகளில் கணக்கு தொடங்கப்பட்டதாக குறிப்பிட்டிருந்தார். ஆனால், பெரம்பூர் தொகுதிக்கான வேட்புமனுவின் பிரமாண பத்திரத்தில் இந்த இரண்டு தகவல்களையும் குறிப்பிடவில்லை.

இது தொடர்பான செய்திகள் நேற்று வெளியாகின. இந்த நிலையில் இன்று பெரம்பூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்யும் அதிகாரியிடம், விஜய் சார்பில் திருத்தப்பட்ட பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முதலில் குறிப்பிடாத சில தகவல்களை தற்போது கூடுதலாக சேர்த்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com