"எப்போ ஆட்சி அமைப்போம்.." பனையூரில் பொங்கிய தவெகவினர் - அமைதிப்படுத்திய ஆனந்த்!

எக்காரணம் கொண்டும் ஊடகங்களுக்கு பேட்டியளிப்பதோ, விவாதங்களில் பங்கேற்பதோ கூடாது
"எப்போ ஆட்சி அமைப்போம்.." பனையூரில் பொங்கிய தவெகவினர் -  அமைதிப்படுத்திய ஆனந்த்!
Published on

த.வெ.க. சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அனைவரும் பனையூரில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பனையூர் அலுவலகத்தில் த.வெ.க. த.வெ.க. பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் மற்றும் த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

கூட்டம் மூடிவடைந்து வெளியே வந்ததும் புஸ்ஸி ஆனந்தை சூழ்ந்த தவெகவினர் எப்போது ஆட்சி அமைப்போம் என கோஷமிட்டு தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். அவர்களை சைகையாலேயே சமாதானப்படுத்தி புஸ்ஸி ஆனந்த் அமைதிப்படுத்தினார்.

முன்னதாக கூட்டத்தில் தவெக வெற்றி வேட்பாளர்கள் எக்காரணம் கொண்டும் ஊடகங்களுக்கு பேட்டியளிப்பதோ, விவாதங்களில் பங்கேற்பதோ கூடாது என ஆனந்த் ஆர்டர் போட்டுள்ளதாக கூறப்படுகிறது.

திமுகவில் இருந்து தாவிய காங்கிரசின் 5 இடங்களையும் சேர்த்து 113 இடங்களை கையில் வைத்துள்ள தவெக பெரும்பான்மை கிடைக்காமல் ஆட்சியமைக்க அலைமோதி வருவது குறிப்பிடத்தக்கது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com