தமிழ்நாடு அரசின் தலைமை கொறடாவாக தவெக எம்.எல்.ஏ. சபரிநாதன் நியமனம்!

தமிழ்நாடு அரசின் தலைமை கொறடாவாக விருகம்பாக்கம் தவெக எம்.எல்.ஏ. சபரிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசின் தலைமை கொறடாவாக தவெக எம்.எல்.ஏ. சபரிநாதன் நியமனம்!
Published on

தமிழ்நாடு 17-ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. நேற்று தற்காலிக சபாநாயகர் கருப்பையா எம்.எல்.ஏக்களுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

அதனைத்தொடர்ந்து இன்று சபாநாயகராக தவெக எம்.எல்.ஏ. ஜேசிடி பிரபாகர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆயிரம் விளக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான ஜே.சி.டி. பிரபாகர், முதலமைச்சர் விஜய் முன்னிலையில் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

அவரை எதிர்த்து யாரும் வேட்புமனுத் தாக்கல் செய்யாததால், அவர் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டதாகத் தற்காலிகச் சபாநாயகர் கருப்பையா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

அறிவிப்பு வெளியானதும், அவை முன்னவர் செங்கோட்டையன் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இணைந்து ஜே.சி.டி. பிரபாகரை சபாநாயகர் இருக்கைக்கு அழைத்துச் சென்று அமர வைத்தனர்.

அதேபோல், துறையூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான ரவிசங்கர் துணை சபாநாயகராக ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் அரசின் கொறடாவாக சபரிநாதன் நியமனம் நியமிக்கப்பட்டுள்ளார்.

விருகம்பாக்கம் தவெக எம்.எல்.ஏவான சபரிநாதன், முதலமைச்சர் விஜய்யின் கார் ஓட்டுநரான ராஜேந்திரனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com