வாளால் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய தவெக எம்எல்ஏ

தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து உள்ளது.
வாளால் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய தவெக எம்எல்ஏ
Published on

தமிழக சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இமாலய வெற்றி பெற்றுள்ளார். மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து உள்ளது.

தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய 2 கட்சிகளையும் பின்னுக்கு தள்ளி விட்டு தமிழக அரசியல் வரலாற்றை மாற்றி எழுதிய விஜய் விரைவில் தமிழக முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளார்.

இந்த வெற்றியை தவெக தொண்டர்கள் இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.

இந்நிலையில், சென்னை ராயபுரத்தில் தவெக எம்எல்ஏ விஜய் தாமு தனது பிறந்தநாளில் கேக்கை வாளால் வெட்டி கொண்டாடி உள்ளார்.

தவெக நிர்வாகி லயோலா மணி தடுத்தும் கேட்காமல் எம்எல்ஏ கேக்கை வாளால் வெட்டி கொண்டாடினார். அவர் வாளால் கேக் வெட்டி கொண்டாடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com