வில்லிவாக்கம் தொகுதியில் த.வெ.க. தலைவர் விஜய் ரோடு ஷோ: ஆதவ் அர்ஜுனாவுக்கு ஆதரவு திரட்டினார்

வில்லிவாக்கம் தொகுதியில் த.வெ.க. தலைவர் விஜய் ரோடு ஷோ மூலம் ஆதவ் அர்ஜுனாவுக்கு ஆதரவு திரட்டினார்.
வில்லிவாக்கம் தொகுதியில் த.வெ.க. தலைவர் விஜய் ரோடு ஷோ: ஆதவ் அர்ஜுனாவுக்கு ஆதரவு திரட்டினார்
Published on

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் இன்று ஆதவ் அர்ஜுனாவை ஆதரித்து வில்லிவாக்கம் தொகுதியில் ரோடு ஷோ நடத்தினார். அப்போது விஜயை பார்க்க ஏராளமானோர் திரண்டிருந்தனர். பெண்கள் கடும் வெயிலில் நீண்ட நேரம் காத்திருந்ததால், சிலர் மயக்கம் அடைந்தனர். சில இடங்களில் ஒரே இடத்தில் பெண்கள் திரண்டதால் சங்கடமான நிலை ஏற்பட்டது.

பிரசார வாகனத்தின் மேல் ஏறி நின்று, விஜய் மக்களை நோக்கி கையசைத்தவாறு சென்றார். விஜயின் பிரசாரத்தால் பாடி, அண்ணாநகர் போக்குவரத்தால் ஸ்தம்பித்தது.

ரோடு ஷோவின் போது விஜய்க்கு செங்கோல் மற்றும் எம்.ஜி.ஆர். சிலை பரிசளிக்கப்பட்டது. எம்.ஜி.ஆர். சிலைக்கு விஜய் முத்தமிட்டார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com