TN Election 2026 | அரசியல்னா பேசனும்: விஜய்-க்கு அரசியல் அனுபவம் கிடையாது- ப. சிதம்பரம்

அரசியல்னா பேச்சுதானே, சர்ச்சைதானே, விவாதம்தானே, எங்கள் கருத்தை சொல்கிற மாதிரி, அவர் கருத்தை சொன்னால்தானே விவாத செய்ய முடியும் என விஜயை நோக்கி ப. சிதம்பரம் கேள்வி எழுப்பினார்.
TN Election 2026 | அரசியல்னா பேசனும்: விஜய்-க்கு அரசியல் அனுபவம் கிடையாது- ப. சிதம்பரம்
Published on

விஜய் கட்சி வந்திருக்கு. அவங்களுக்கு அரசியல் அனுபவம் கிடையாது. காரைக்குடிக்கு வந்தாரு. பேசாமலேயே போய்ட்டாரு. அரசியல்னா பேச்சுதானே, சர்ச்சைதானே, விவாதம்தானே, எங்கள் கருத்தை சொல்கிற மாதிரி, அவர் கருத்தை சொன்னால்தானே விவாத செய்ய முடியும்.

நான் பேசாமல் இருப்பேன். பேசாமல் இருந்தா?, பத்திரிகையாளர்களை சந்திப்பதில்லை. மக்களை சந்தித்து பேசுவதில்லை. நான் உள்துறை அமைச்சராக இருந்தேன். நிதி அமைச்சராக இருந்தேன். தனியாகத்தான் வருகிறேன். ஊர் ஊரா பேச தயாராக இருக்கிறேன்.

அவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆதரவு இருக்கிறது. நான் வாழ்த்துகிறேன். ஆனால் ஆட்சி செய்ய வேண்டுமல்லவா?. ஆட்சி செய்வது வேற. சினிமாவில் நடிப்பது வேற. எந்த திட்டத்தை செயல்படுத்தினால் மக்களுக்கு பயன் கிடைக்கும். எந்த வகையில் பணத்தை செலவழித்தால் மக்களுக்கு பலன் கிடைக்கும். மக்களுக்கு வளர்ச்சி கிடைக்கும். சாலை திட்டம், பள்ளிக் கூடம் திட்டம், மருத்துவமனை திட்டம் அனைத்தையும் நுணுக்கமாக பார்த்துதான் ஆட்சி செய்யனும்.

ஆட்சி செய்வது எளிது அல்லதான். நான் 20 வருசமாக ஆட்சி செய்திருக்கிறேன். அது எளிதான காரியம் அல்ல. ஆட்சி செய்வதில் ரீ-டேக் என்பதெல்லாம் கிடையாது. சினிமாவில் நடிக்கும் ஒரு காட்சி சரியில்லை என்றால், டைரக்டர் இன்னொரு முறை நடிக்க சொல்வாரு. ஆட்சியில் அவ்வாறு செய்ய முடியாது. ஒரு முடிவு எடுத்தா, முடிவுதான். அந்த அனுபவம் மு.க. ஸ்டாலினுக்கு வந்திருக்கிறது. மேயராக இருந்தாரு, அமைச்சராக இருந்தாரு, துணை முதல்வராக இருந்தாரு. ஐந்து ஆண்டுகள் சிறப்பான ஆட்சி நடத்தியிருக்காரு.

இவ்வாறு ப.சிதம்பரம் பேசினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com