த.வெ.க. வேட்பாளர் செங்கோட்டையன் வேட்புமனு ஏற்பு!

இன்றுகாலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தவெக வேட்பாளர் செங்கோட்டையனின் வேட்புமனு ஏற்பு.
த.வெ.க. வேட்பாளர் செங்கோட்டையன் வேட்புமனு ஏற்பு!
Published on

2026 தமிழ்நாடு சட்டப்பேரவையில் கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் தவெக வேட்பாளராகப் போட்டியிடும் கே.ஏ. செங்கோட்டையனின் வேட்புமனு, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், பரிசீலனைக்கு பிறகு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

மார்ச் 30ஆம் தேதி செங்கோட்டையன் வேட்புமனு தாக்கல் செய்தநிலையில், அவர் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் குளறுபடிகள் இருப்பதாகவும், புதிய வீட்டிற்கு வருமான வரி செலுத்தவில்லை என்றும் அதிமுக வேட்பாளரின் முகவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து அவர் வேட்புமனுமீதான பரிசீலனை நிறுத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. மாலை 5 மணிக்குள் செங்கோட்டையன் தரப்பு விளக்கம் அளிக்கவும் கோரப்பட்டது.

இதனைத்தொடர்ந்து பரிசீலனைக்கு பிறகு செங்கோட்டையனின் வேட்புமனுவை ஏற்றுக்கொள்வதாக தேர்தல் நடத்தும் அலுவலர் எஸ்.சிவானந்தம் அறிவித்துள்ளார். கோபி தொகுதியில் 9வது முறையாக செங்கோட்டையன் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com