வில்லிவாக்கம் தொகுதியில் ஆதவ் அர்ஜுனா வேட்புமனு நிறுத்திவைப்பு

வேட்புமனுவை தாக்கல் செய்வதற்கான காலஅவகாசம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், இன்று வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்று வருகிறது.
ஆதவ் அர்ஜுனா
ஆதவ் அர்ஜுனா
Published on

234 தொகுதிகளுக்கான தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 23-ந்தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகளின் எண்ணிக்கை அடுத்த மாதம் (மே) 4-ந்தேதி நடைபெற உள்ளது. அதற்குமுன்பாக வேட்பாளரை இறுதி செய்யும் நடவடிக்கையாக வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 30-ந்தேதி தொடங்கியது. வேட்புமனுவை தாக்கல் செய்வதற்கான காலஅவகாசம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், இன்று வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்று வருகிறது.

தேர்தலில் போட்டியிட மொத்தம் 7,600 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். மனுக்களைத் திரும்பபெற நாளை மறுநாள் கடைசி நாளாகும்.

இந்த நிலையில், வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்று வரும் நிலையில், சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட த.வெ.க. நிர்வாகி ஆதவ் அர்ஜுனா தாக்கல் செய்த வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தேர்தல் கண்காணிப்பாளர் வரும் வரை ஆதவ் அர்ஜுனாவின் வேட்புமனுவை நிறுத்தி வைப்பதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்துள்ளார்.

ஆதவ் அர்ஜுனா வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதற்காக கூறப்பட்ட காரணங்கள்:

* த.வெ.க. நிர்வாகி ஆதவ் அர்ஜுனா மனைவியின் பெயரில் உள்ள 35 நிறுவனங்களின் பெயர்களை மனுவில் குறிப்பிடவில்லை.

* கையிருப்பாக ரூ.2 கோடி வைத்திருக்கக்கூடாது என்ற ஆட்சேபனை எழுந்துள்ளதால் ஆதவ் அர்ஜுனா வேட்புமனு நிறுத்திவைப்பு

* வங்கியில் போடப்பட்டுள்ள FD-யில் இருந்து கிடைக்கும் வருவாயை வேட்புமனுவில் ஆதவ் அர்ஜுனா காட்டவில்லை.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com