தவெக அமைச்சரவை விரிவாக்கம் - முக்கிய துறைகள் யார் யாருக்கு?

நிதித்துறை மரிய வில்சனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
தவெக அமைச்சரவை விரிவாக்கம் - முக்கிய துறைகள் யார் யாருக்கு?
Published on

தவெக தலைவர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அமைச்சரவையின் இரண்டாம் கட்ட விரிவாக்கத்தில் 23 புதிய அமைச்சர்கள் இன்று (மே 21) பொறுப்பேற்றுள்ளனர். இதில் காங்கிரஸின் 2 அமைச்சர்களும் அடங்குவர். முன்னர் மே.16 அன்று முதலமைச்சருடன் 10 அமைச்சர்கள் பதவியேற்ற நிலையில், இதனுடன் 33 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர்.

முக்கிய தவெக அமைச்சர்கள் மற்றும் அவர்களின் இலாகாக்கள் விவரம் பின்வருமாறு:

  • முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் - பொது நிர்வாகம், உள்துறை, காவல்துறை, நகராட்சி நிர்வாகம், இளைஞர் நலம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலம், நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல்

  • வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை - செங்கோட்டையன்

  • ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து மற்றும் நீர்வளத்துறை - என். ஆனந்த்

  • பொதுப்பணித்துறை, விளையாட்டு மேம்பாட்டுத்துறை - ஆதவ் அர்ஜுனா

  • மருத்துவத்துறை - அருண்ராஜ்

  • நிதித்துறை - மரியவில்சன்

  • போக்குவரத்துறை - விஜய் தமிழன் பார்த்திபன்

  • மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை - விக்னேஷ்

  • பள்ளிக்கல்வித்துறை - ராஜ்மோகன்

  • உயர்கல்வித்துறை - விஸ்வநாதன் (காங்கிரஸ்)

  • இந்து சமய அறநிலையத்துறை - ரமேஷ்

  • மின்சாரம் மற்றும் சட்டத்துறை - சி.டி.நிர்மல்குமார்

  • வேளாண்துறை - வினோத்

  • சுற்றுலாத்துறை - ராஜேஸ்குமார் (காங்கிரஸ்)

  • பால்வளத்துறை - விஜயலட்சுமி

  • ஏஐ மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை - குமார்

  • வணிகவரித்துறை - லோகேஷ் தனபால்

  • தொழில்துறை - கீர்த்தனா

X

Maalai Malar
www.maalaimalar.com