திருச்செங்கோடு தொகுதியில் தவெக வேட்பாளர் அருண்ராஜ் வேட்புமனு தாக்கல்

திருச்செங்கோட்டில் மக்களின் அடிப்படை பிரச்சனைகளை தீர்த்து வைப்பதாக உறுதி அளித்த அருண்ராஜ், திமுகவை வீழ்த்தி தங்கள் தலைவர் விஜய் நல்லாட்சி கொடுப்பார் என நம்பிக்கை தெரிவித்தார்.
திருச்செங்கோடு தொகுதியில் தவெக வேட்பாளர் அருண்ராஜ் வேட்புமனு தாக்கல்
Published on

தமிழக சட்டமன்றத்துக்கான பொதுத்தேர்தல் வருகிற 23-ந்தேதி நடக்கிறது.

தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான அணியும், அ.தி.மு.க. தலைமையிலான அணியும், நாம் தமிழர் கட்சியினர் தனியாகவும், தமிழக வெற்றிக்கழகம் தனி அணியாகவும் களத்தில் நிற்கின்றன. இதனால் தமிழகத்தில் 4 முனைப்போட்டி நிலவுகிறது.

இந்த கட்சிகளின் தலைவர்களும், வேட்பாளர்களும் தேர்தல் களத்தில் வரிந்து கட்டிக்கொண்டு வேட்பு மனு தாக்கல் செய்வதிலும், தங்களது கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்வதிலும் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 30-ந் தேதி தொடங்கிய நிலையில், வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் 6-ந்தேதியாகும். அன்று மதியம் 3 மணி வரை வேட்பு மனுக்கள் பெறப்படுகிறது.

இதற்காக மாநிலம் முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகம் உருவாக்கப்பட்டு உள்ளது. அந்த அலுவலகங்களில் இன்று காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வேட்பு மனுக்கள் பெறப்படுகிறது.

இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

பிரசார வாகனத்தில் ஊர்வலமாக சென்ற அருண்ராஜ், தந்தை பெரியார், கர்மவீரர் காமராஜர் சிலைகளுக்கு மரியாதை செலுத்தினார். திருச்செங்கோட்டில் மக்களின் அடிப்படை பிரச்சனைகளை தீர்த்து வைப்பதாக உறுதி அளித்த அவர், திமுகவை வீழ்த்தி தங்கள் தலைவர் விஜய் நல்லாட்சி கொடுப்பார் என நம்பிக்கை தெரிவித்தார்.

இதையடுத்து கட்சி தொண்டர்களுடன் சென்று தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அருண்ராஜ் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com