தவெக கூட்டணி ஆலோசனை கூட்டம் நிறைவு

கூட்டத்தில் இடதுசாரி கட்சிகள் பங்கேற்கவில்லை.
TVK Alliance Meet
Published on

சென்னையை அடுத்த கோவளத்தில் தவெக தலைவரும், முதலமைச்சருமான விஜய் தலைமையில் தவெக தோழமைக் கட்சிகளின் ஆலோசனை கூட்டம் இன்று மாலை தொடங்கியது. ஒரு மணி நேரம் நடைபெற்ற இக்கூட்டம் நிறைவுபெற்றது.

முதல்வரும் தவெக தலைவருமான விஜய் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் காங்கிரஸ், விசிக, மதிமுக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேறனர். கூட்டத்தில் இடதுசாரி கட்சிகள் பங்கேற்கவில்லை.

கோவளத்தில் நடந்த தவெக தோழமை கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற நிர்மல்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

தவெக கூட்டணிக்கு புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளதா? என்ற கேள்விக்கு முதலமைச்சர் விஜய் அறிவிப்பார் என அமைச்சர் நிர்மல் குமார் பதிலலித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில்," தற்போது அமைந்துள்ள கூட்டணி இயற்கையான கூட்டணி என அனைவரும் மகிழ்சசி தெரிவித்துள்ளனர்.

எந்த கருத்து வேறுபாடும் இன்றி கூட்டணி கட்சியினர் பயணிப்பது மகிழ்ச்சி தருகிறது.

கம்யூனிஸ்ட் கட்சிகள் அவர்களுக்குள் பேசிய பின்னர் தவெக கூட்டணியில் இணைவது குறித்து அறிவிப்பார்கள்" என்றார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com