தமிழகத்திற்கு எதிரான திட்டங்களை பிரதமர் மோடி ஒருபோதும் கொண்டு வரமாட்டார்: அண்ணாமலை

சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து செய்யப்படவில்லை.உங்களுக்காக, உங்கள் குரலுக்காக பிரதமர் மோடி உங்களுடன் இருந்து இந்த திட்டத்தை ரத்து செய்துள்ளார்.
தமிழகத்திற்கு எதிரான திட்டங்களை பிரதமர் மோடி ஒருபோதும் கொண்டு வரமாட்டார்: அண்ணாமலை
Published on

மதுரை மாவட்டம் வல்லாளப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்ததற்காக பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

பாராட்டு விழாவில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேசியதாவது:-

* தமிழகத்திற்கு எதிரான திட்டங்களை பிரதமர் மோடி ஒருபோதும் கொண்டு வரமாட்டார்.

* மீத்தேன் ஹைட்ரோ கார்பன் திட்டம் வேண்டாம் என்றபோது, 2 நாட்களில் தமிழக பா.ஜ.க. தலைவர்கள் டெல்லிக்கு சென்று திட்டத்தை நிறுத்துவிட்டார்கள்.

* அமைச்சர் கிஷண் ரெட்டி மற்றும் அங்குள்ள செயலாளர்களுக்கு அரிட்டாபட்டி எப்படிப்பட்ட பகுதி என்று தெரியாது. தெரியப்படுத்த வேண்டியது நமது கடமை.

* மத்திய அரசு டங்ஸ்டன் சுரங்கம் குறித்து தமிழக அரசுக்கு கடிதம் எழுதியபோது. அப்போது 4,890 ஏக்கரில் வெறும் 477 ஏக்கர் நிலம்தான் பல்லுயிர் பூங்காவாக இருக்கிறது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மற்றவை பற்றி தெரிவிக்கவில்லை. கோவில், ஒருபோக விவசாயம் குறித்து யாரும் சொல்லவில்லை. பெரியாறு அணையில் இருந்து வரும் நீர்ப்பாசனம் பற்றி யாரும் சொல்லவில்லை.

* அதனைத்தொடர்ந்து டெண்டர் விடப்படுகிறது. முதல்முறை விடப்பட்ட டெண்டரில் யாரும் டெண்டர் கோரவில்லை. பின்னர் 2024 ஏப்ரல் மாதம் டெண்டர் விடுகிறார்கள். அப்போது மாநில அரசுக்கு தெரியும்.

* நவம்பர்- டிசம்பர் மாதம் டெண்டர் எடுத்த பின்னர்தான் உங்களுக்கு தெரியும், எனக்கு தெரியும். எல்லோருக்கும் தெரியும்.

* மத்திய அரசில் ஒரு திட்டத்தை ரத்து செய்வது அவ்வளவு சுலபம் கிடையாது. பல இடங்களுக்கு போக வேண்டும். அமைச்சரவை ஒப்புதல் வாங்க வேண்டும்.

* ஊர் அம்பலத்தாரர்கள் சந்தித்து, 24 மணி நேரத்திற்குள் மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி திட்டம் ரத்து செய்யப்பட்டதாக அறிவித்தார்.

* உங்களுடைய குரலுக்கு செவி சாய்த்து, உங்களுடைய மண் உங்களோடு இருக்க வேண்டும் என பிரதமர் மோடி எடுத்த முடிவு இது.

* பிரதமர் மோடி தமிழக மக்களோடு கலந்து இருக்கக் கூடியவர்.

* சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் இந்த திட்டம் ரத்து செய்யப்படவில்லை என்பது ஒவ்வொருவருக்கும் தெரியும்.

* சட்டசபையில் தீர்மானம் போடுவதுதான் அவர்களது வேலை.

* உங்களுக்காக, உங்கள் குரலுக்காக பிரதமர் மோடி உங்களுடன் இருந்து இந்த திட்டத்தை ரத்து செய்துள்ளார்.

* மாநில அரசு மிரட்டலுக்கு.. மாநில அரசு மிரட்டலுக்கெல்லாம் மோடி எப்போதும் பயந்தது கிடையாது. அப்படியிருந்தால் ஆட்சியில் உட்கார்ந்த இருக்க முடியாது.

இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com