தூத்துக்குடியில் இன்று காலை திடீரென வெடித்த டிரான்ஸ்பார்மர்

டிரான்பார்மர் வெடித்ததும் அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் அங்கு சென்று பார்த்தபோது தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது.நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் தீ அணைக்கப்பட்டது.
வெடித்த டிரான்ஸ்பார்மர் தீப்பிடித்து எரியும் காட்சி
வெடித்த டிரான்ஸ்பார்மர் தீப்பிடித்து எரியும் காட்சி
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி பழைய பஸ் நிலையம் அருகே உள்ள பாளையங்கோட்டை சாலையில் ஒரு டிரான்பார்மர் அமைக்கப்பட்டுள்ளது.

நகரின் மையப்பகுதியான இங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கு மின்வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை இந்த டிரான்பார்மர் அதிக சத்தத்துடன் வெடித்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் அங்கு சென்று பார்த்தபோது அதில் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது.

உடனடியாக சம்பவ இடத்திற்கு தூத்துக்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் சகாயராஜ் தலைமையில் வீரர்கள் முருகையா, அருள், பெருமாள் மற்றும் அருள்ஞானபாலன் உள்ளிட்டவர்கள் விரைந்து சென்று மின் இணைப்பை துண்டித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் தீ அணைக்கப்பட்டது. இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இது தொடர்பாக மத்திய பாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com