Train Service | வேளச்சேரி- பரங்கிமலை இடையே ரெயில் சேவை தொடங்கியது

43 ஜோடி ரெயில் சேவை பரங்கிமலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பறக்கும் ரெயில் நீட்டிப்புத் தடத்தில் ரெயில் சேவை தொடங்கியது.
Train Service | வேளச்சேரி- பரங்கிமலை இடையே ரெயில் சேவை தொடங்கியது
Published on

சென்னை வேளச்சேரி- பரங்கிமலை இடையே பறக்கும் ரெயில் நீட்டிப்புத் தடத்தில் ரெயில் சேவை தொடங்கியது.

அதன்படி, சென்னை கடற்கரை- வேளச்சேரிக்கு இடையிலான 43 ஜோடி ரெயில் சேவை பரங்கிமலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக நீட்டித்து வந்த பணிகள் நிறைவடைந்ததை அடுத்து ரெயில்கள் இயக்கப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதன்மூலம், தென்சென்னை மக்கள் நகரின் எந்தப் பகுதிக்கும் எளிதாக பயணம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com