தலைக்கேறிய கஞ்சா போதை?.. தண்டவாளத்தில் தள்ளாடிய மாணவர்கள்

பயணிகள் நடமாட்டம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்.ரெயில் நிலையத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தலைக்கேறிய கஞ்சா போதை?.. தண்டவாளத்தில் தள்ளாடிய மாணவர்கள்
Published on

அரக்கோணம்:

அரக்கோணம் ரெயில் நிலையத்தில் மொத்தம் 8 பிளாட்பாரம் உள்ளன. இதில் பயணிகள் நடமாட்டம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்.

இந்நிலையில் நேற்று 5-வது பிளாட்பாரத்திற்கு அரக்கோணம் அரசு ஐ.டி.ஐ. சீருடையில் 2 மாணவர்கள் வந்தனர். அவர்கள் திடீரென தண்டவாளத்தில் குதித்து கட்டி பிடித்து புரண்டனர். ஒரு மாணவன் கஞ்சா போதையில் தண்டவாளத்தில் விழ இன்னொரு மாணவன் அவனை தாங்கிப் பிடித்தான்.

அப்போது அந்த மாணவனும் போதையில் கீழே விழுந்தான். அதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில் எந்த ரெயில்களும் வரவில்லை. இது ஏதோ சினிமா சூட்டிங் நடப்பது போல் அரங்கேறியது.

இதனை கண்டு பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு வந்த ரெயில்வே போலீசார் மாணவர்களை விரட்டியடித்தனர்.

இந்தக் காட்சி தற்பொழுது அரக்கோணம் மக்களிடையே வீடியோவாக பரவிவருகிறது.

கஞ்சா போதையில் மாணவர்கள் ரெயில் தண்டவாளத்தில் கட்டி புரண்ட சம்பவம் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அரக்கோணம் பகுதியில் பள்ளி கல்லூரிகள் படிக்கும் மாணவர்களுக்கு கஞ்சா விற்கும் நபர்களையும் கஞ்சா வியாபாரிகளை கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com