உடுமலை பஞ்சலிங்க அருவிக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்

தினமும் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.சுற்றுலா பயணிகள் குளிர்ச்சியாக விழும் அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்கின்றனர்.
உடுமலை பஞ்சலிங்க அருவிக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்
Published on

உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலையில் மலைமேல் 960 மீட்டர் உயரத்தில் பஞ்சலிங்க அருவி உள்ளது. மேலும் மலையடிவாரத்தில் பாலாற்றின் கரையில் சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஓரிடத்தில் எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில், திருமூர்த்தி அணை, வண்ண மீன் பூங்கா, நீச்சல் குளம் உள்ளது. ஆன்மீகம் மற்றும் சுற்றுலாத்தலமாக உள்ள இப்பகுதிக்கு தினமும் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதாலும், பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதாலும் பஞ்சலிங்க அருவியில் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில், அவ்வப்போது மழை பெய்து வருவதால் மலைப்பகுதிகளில் இருந்து மூலிகை குணங்களுடன் விழும் அருவியில் நீர்வரத்து திருப்தியாக உள்ளது. சுற்றுலா பயணிகள் குளிர்ச்சியாக விழும் அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்கின்றனர். நடப்பு ஆண்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால் திருமூர்த்திமலையில் சீசன் களைகட்டி உள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com