சென்னையில் நாளை (08.07.2026) மின்தடை ஏற்படும் இடங்கள்...

காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.
மின்தடை
Published on

சென்னை:

சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (08.07.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,

கொட்டிவாக்கம்

திருவள்ளுவர் நகர் 1 மற்றும் 3 முதல் 6-வது பிரதான சாலைகள் வரை, 7-வது முதல் 33-வது குறுக்குத் தெருக்கள் வரை, 1 மற்றும் 3-வது அவென்யூ, வீட்டுவசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்புகள் எச் 12 முதல் எச் 40 வரை.

பெசன்ட்நகர்

சாஸ்திரி நகர் 1-வது அவென்யூ, 1-வது மற்றும் 2-வது குறுக்குத் தெருக்கள், 9-வது லேன், ஜீவரத்தினம் நகர் 1-வது பிரதான சாலை, டெலிபோன் எக்ஸ்சேஞ் மற்றும் வணிக வளாகம்.

நொளம்பூர்

மேற்கு முகப்பேர் 5-வது பிளாக் முதல் 8-வது பிளாக் வரை மற்றும் கவிமணி சாலை.

கே.கே. நகர்

1 முதல் 12-வது செக்டர்கள், ராஜமன்னார் சாலை, ராமசாமி சாலை, லட்சுமணசாமி சாலை, ஆர்.கே. சண்முகம் சாலை, நெசப்பாக்கம், பி.டி. ராஜன் சாலை, அசோக் நகர் 1, 9 மற்றும் 11-வது அவென்யூ, கன்னிகாபுரம், விஜயராகவபுரம் மற்றும் 80 அடி சாலை.

X

Maalai Malar
www.maalaimalar.com