

சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (04.07.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,
எம்கேபி நகர், மகளிர் தொழிற்பேட்டை, திருநீர்மலை பிரதான சாலை, பெருமாள் நகர், ஸ்ரீ கிருஷ்ணா நகர், வழுதலம்பேடு, மைக்ரோ எஸ்டேட், பாம் ரிவேரா அபார்ட்மெண்ட், ராயல் கேஸ்டல் அபார்ட்மெண்ட், அமர்ப்ரகாஷ் அபார்ட்மெண்ட், குமரன் நகர், மகாலட்சுமி கோ-ஆப்ரடிவ் சொசைட்டி, பிகேவி மகா நகர், கலைமகள் நகர், கற்பகம் நகர், டாசியோவா தொழிற்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
சிறுகளத்தூர், கெளித்பேட்டை, நந்தம்பாக்கம், பெரியார்நகர், அஞ்சுகம்நகர், மலையம்பாக்கம், பஜார் தெரு, மேத்தாநகர், ஜி ஸ்கொயர், மணிகண்ட நகர்.