Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 18 மார்ச் 2026: சர்வ அமாவாசை

ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள், தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர் கோவில்களில் பெருமாள் புறப்பாடு.
Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 18 மார்ச் 2026: சர்வ அமாவாசை
Published on

இன்றைய பஞ்சாங்கம்

விசுவாவசு ஆண்டு பங்குனி-4 (புதன்கிழமை)

பிறை : தேய்பிறை

திதி : சதுர்த்தசி காலை 8.26 மணி வரை பிறகு அமாவாசை

நட்சத்திரம் : பூரட்டாதி நாளை விடியற்காலை 5.53 மணி வரை பிறகு உத்திரட்டாதி

ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

சூலம் : வடக்கு

நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

இன்று சர்வ அமாவாசை, மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீகோதண்டராம சுவாமிக்கு திருமஞ்சனம்

இன்று சர்வ அமாவாசை. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதிக்கு பால் அபிஷேகம். திருபுவனம் ஸ்ரீ கோதண்ட ராம சுவாமி, கம்பம் ஸ்ரீ கம்பவராயப் பெருமாள் கோவில்களில் உற்சவம் ஆரம்பம். ராமேசுவரம், வேதாரண்யம், திலகைப்பதி, திருவெண்காடு, திருவள்ளூர் கோவில்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய நன்று. திருக்கண்ணபுரம் ஸ்ரீ சவுரிராஜப் பெருமாள் ஸ்ரீ விபீஷ்ணாழ்வாருக்கு நடையழகு சேவை காண்பித்தருளல். மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீகோதண்டராம சுவாமிக்கு திருமஞ்சனம். ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள், தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர் கோவில்களில் பெருமாள் புறப்பாடு.

விருதுநகர் விஸ்வநாதர், வேதாரண்யம், திருமறைக்காடர் கோவில்களில் அபிஷேகம். திருநெல்வேலி சமீபம் 4-ம் நவதிருப்பதி திருபுளியங்குடி ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை கோவிலில் அலங்கார திருமஞ்சனம். கரூரில் அமாவதி நதியின் வடகரையில் உத்தான சயனத்தில் ஸ்ரீ அபயபிரதான ஸ்ரீ ரங்கநாதர், திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்க வாசகர், திருப்போரூர் ஸ்ரீ ஆண்டவர் புறப்பாடு. ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ பெரிய பெருமாள், ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு.

இன்றைய ராசிபலன்

மேஷம்-வரவு

ரிஷபம்-ஆதரவு

மிதுனம்-ஈகை

கடகம்-பெருமை

சிம்மம்-பரிசு

கன்னி-உயர்வு

துலாம்- ஆர்வம்

விருச்சிகம்-கவனம்

தனுசு- அமைதி

மகரம்-நிறைவு

கும்பம்-கடமை

மீனம்-லாபம்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com