TNPSC தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினார் முதலமைச்சர் விஜய்

மின்வாரியத்தில் 15,000 பேரை நியமிக்கும் ஆணைக்கு முதலமைச்சர் விஜய் ஒப்புதல்.
CM Vijay
பணி நியமன ஆணை
Published on

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவானர் அரங்கில் தமிழ்நாடு தேர்வாணையத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு முதலமைச்சர் விஜய் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 401 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

இதில் 383 உதவிப் பொறியாளர் மற்றும் 18 உதவி கணக்கு அலுவலர்கள் தங்களது பணி நியமன ஆணையை பெற்றனர்.

மேலும் நடப்பு ஆண்டிற்குள் மின்வாரியத்தில் 15,000 பேரை நியமிக்கும் ஆணைக்கு முதலமைச்சர் விஜய் ஒப்புதல் அளித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com