

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் -1 பதவிகளுக்கான புதிய தேர்வு அறிவிப்பை இன்று அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.
அரசு உயர் பதவிகளில் சேரத் தயாராகி வரும் தமிழக இளைஞர்களுக்கு இந்த அறிவிப்பு நல்ல வாய்ப்பாக அமைத்துள்ளது.
தேர்வுத் தேதிகள்..
விண்ணப்பிக்கத் தொடங்கும் நாள்: ஜூன் 30, 2026
விண்ணப்பிக்கக் கடைசி நாள்: ஜூலை 29, 2026
விண்ணப்பத் திருத்த காலம் : ஆகஸ்ட் 2
முதல்நிலைத் தேர்வு நடைபெறும் நாள்: செப்டம்பர் 6
கல்வித் தகுதி மற்றும் வயது வரம்பு..
அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றவர்கள் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் ஆவர்.
விண்ணப்பிக்கும் அனைவருக்கும் குறைந்தபட்ச வயது 21 பூர்த்தியாகி இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு நீங்கள் எந்தச் சமுதாயப் பிரிவை சேர்ந்தவர் என்பதைப் பொறுத்து மாறும்.
34 வயதிற்குள் இருக்கும் பொதுப்பிரிவினரும், 39 வயதிற்குள் இருக்கும் இதர பிற்படுத்தப்பட்ட/தாழ்த்தப்பட்ட/பழங்குடியின தேர்வர்களும் இந்த உயரிய குரூப்-1 தேர்வுக்கு தாராளமாக விண்ணப்பிக்கலாம்.
மேலும், மாற்றுத்திறனாளித் தேர்வர்களுக்கு அவர்கள் சார்ந்த சமுதாயப் பிரிவின் அதிகபட்ச வயதிலிருந்து கூடுதலாக 10 ஆண்டுகள் வயதுச் சலுகை வழங்கப்படும்.
காலிப்பணியிடங்கள் மற்றும் பதவிகளின் விவரம்..
துணை ஆட்சியர் – 12 இடங்கள்
மாவட்டப் பதிவாளர் – 8 இடங்கள்
கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் – 3 இடங்கள்
உதவி ஆணையர் (வணிக வரித் துறை) – 2 இடங்கள்
உதவி ஆணையர் (தொழிலாளர் துறை) – 1 இடம்
மொத்தம் 26 காலிப்பணியிடங்கள் உள்ளன.
விண்ணப்பிக்கும் முறை..
தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் டிஎன்பிஎஸ்சியின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.tnpsc.gov.in/ என்ற முகவரியின் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஏற்கனவே ஒருமுறைப் பதிவு செய்திருப்பது அவசியமாகும்.
காலியிடங்களின் எண்ணிக்கை, சம்பள விகிதம் மற்றும் தேர்வுப் பாடத்திட்டம் குறித்த விரிவான அரசாணை விவரங்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.