தமிழ்நாடு பனைமரம் காக்கும் பாதுகாப்பு இயக்கம், குமரி மாவட்டம் சார்பாக விஜய்வசந்த் எம்.பி.யிடம் கோரிக்கை மனு

தலைவர்‌ பனைமரத்தாரகை பிரதிஜீன் அவர்கள் தலைமையில் கோரிக்கை மனு அளித்தனர்.
தமிழ்நாடு பனைமரம் காக்கும் பாதுகாப்பு இயக்கம், குமரி மாவட்டம் சார்பாக விஜய்வசந்த் எம்.பி.யிடம் கோரிக்கை மனு
Published on

தமிழ்நாடு பனைமரம் காக்கும் பாதுகாப்பு இயக்கம் குமரி மாவட்டம் சார்பாக பனை தொழிலாளர்கள் வாழ்வு வளம் பெற 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு கோரிக்கையாக நாடாளுமன்ற கூட்டத்தொடரில் குரல் கொடுக்க வலியுறுத்தி குமரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், எம்பி, அவர்களை மார்த்தாண்டம் அலுவலகத்தில் நிறுவன தலைவர்‌ பனைமரத்தாரகை பிரதிஜீன் அவர்கள் தலைமையில் கோரிக்கை மனு அளித்தனர்.

இந்த கோரிக்கை மனுவில்,

1. பனை தொழிலாளர்களுக்கு அவர் வயது 60 வதை நிரம்பிய உடன் ஓய்வூதியம் வழங்கும் திட்டம் செயல் படுத்திட வேண்டும்.

2. பனைமரம் ஏறும் போது விபத்து ஏற்பட்டு காயம் அடைந்தாலோ இறப்பு ஏற்பட்டாலே தக்க நிவாரணம் அரசு குறைந்தது ரூ. 10 லட்சம் வழங்க வேண்டும்.

3. மீன் பிடி தடைக்காலத்தில் மீனவர்களுக்கு நிவாரண நிதி வழங்குவது போல பனைமர தொழிலாளர்களுக்கும் ரூ.10,000 வழங்க வேண்டும்.

4. குமரி மாவட்டத்தில் அதிகபடி ரப்பர் சாகுபடி நடப்பதால் பால் வெட்டும் தொழிலாளர்களுக்கு மழை மற்றும் பால் வெட்டாத கால கட்டத்தில் ரூ. 8000 வழங்க வேண்டும்.

5. அரசு கேரளாவில் அரசு நிலங்களில் பனைமரம் நடவு செய்வது போல் தமிழ் நாட்டிலும் பனைமரம் நடவு செய்ய வேண்டும்.

6. பனைமர பூங்கா அமைத்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும்.

7. தாய்லாந்து இலங்கை நாடுகளில் பனைப் பொருட்களுக்கு முக்கியத்துவம் அளித்து வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது போல இந்தியாவிலிருந்து பனைப்பொருட்கள் தயார் செய்து ஏற்றுமதி செய்ய நவீன தொழிற் கூட்டங்களும் அமைக்க வேண்டும்.

7. பனைமரம் ஏறுவதற்கான எந்திரங்களை அரசே கண்டுபிடித்து பனைத் தொழிலாளர்களுக்கு அளிக்க வேண்டும்.

8. சுனாமி போன்ற பேரளிவுகளை தவிர்ப்பதற்காக கடற்கரையோரங்களில் பனை விதை நடவு செய்ய வேண்டும் அரசு அதற்கான நிதியை ஒதுக்கவும் வேண்டும்.

9. யானை போன்ற கொடிய விலங்குகள் காட்டிலிருந்து ஊடுருவி ஊருக்குள் நுழைந்து பொது மக்களுக்கு சேதம் ஏற்படுத்துவதை தடுப்பதற்காக காட்டின் ஓர பகுதியில் 3 அடி இடைவெளி விட்டு பனைவிதை வரிசையாக நடவு செய்வதால் வருங்காலத்தில் வேலியாக அமைத்து வனவிலங்குகள் ஊடுருவதை தவிக்கலாம் அதற்கான நடவடிக்கை அரசு எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இந்த நிகழ்வில் இயக்குநர் C.சைமன், நிர்வாக குழு தலைவர் வில்பிரட், மாநில தலைவர் அருள்ராஜ், மாநில சட்ட ஆலோசகர் நிதின், மாநில இளைஞரணி தலைவர்கள் பிரவீன், அஜித், மேல்புறம் ஒன்றிய இளைஞரணி தலைவி திருமதி.ஆட்லின் ஷீபா அகியோருடன் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com