2026 Election | தமிழ்நாடு தேர்தலில் நீங்கள் யார் பக்கம்? பெரம்பூர் மக்களின் ஆதரவு யாருக்கு?

சென்னை பெரம்பூர் தொகுதியில் ஆளும் கட்சியான தி.மு.க.வுக்கே பெரும் ஆதரவு உள்ளது.
2026 Election | தமிழ்நாடு தேர்தலில் நீங்கள் யார் பக்கம்? பெரம்பூர் மக்களின் ஆதரவு யாருக்கு?
Published on

தமிழ்நாட்டில் அடுத்த மாதம் 23-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. ஆளுங்கட்சியான தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும், எதிர்க்கட்சியான அ.தி.மு.க. தலைமையில் மற்றொரு கூட்டணியும் களத்தில் உள்ளன.

இம்முறை நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் மற்றும் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி எந்தக் கூட்டணியும் இன்றி இந்த தேர்தலில் தனித்துப் போட்டியிடுகின்றன.

கடந்த வாரம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், மக்களின் ஆதரவு எந்தக் கட்சிக்கு அதிகம் உள்ளது என்பதை கண்டறிய ஊடகங்கள் பலவும் கருத்துக்கணிப்புகள் நடத்தி வருகின்றன.

அந்தவகையில், பெரம்பூர் சட்டசபைத் தொகுதியில் உள்ள மக்கள் மனநிலை அறிய, சுமார் 50 பேரிடம் மாலைமலர் சார்பில் ஒரு ஜாலி VOX POPS எடுக்கப்பட்டது.

அதன்படி, பெரம்பூர் சர்ச் பகுதியில் ஆளும் கட்சியான தி.மு.க.வுக்கு அதிகப்படியாக 23 பேரும், விஜய்க்கு 12 பேரும், அ.தி.மு.க.வுக்கு 5 பேரும், மற்றவர்களுக்கு 2 பேரும் ஆதரவு தெரிவித்தனர். சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு ஒருவர் கூட ஆதரவு தெரிவிக்கவில்லை.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com